தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சமயல் எரிவாயு விவகாரம் : குற்றவியல் விசாரணைக் கோரி எழுத்தாணை மனு!

0 161

அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மற்றும் இலங்கை தரநிலை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அகியோருக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடக் கோரி எழுத்தாணை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்து, அவற்றை விநியோகித்தமையை மையப்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று இந்த எழுத்தாணை மனு ( ரிட்)தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘ விநிவித பெரமுன’ வின் பொதுச் செயலரும் சமூக செயற்பாட்டாளருமான  நாகானந்த கொடித்துவக்கினால் இந்த  மனுவை தாக்கல்ச் செய்துள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, லாப் மற்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனங்கள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சமயல் எரிவாயு  சிலிண்டர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பு தரங்களை வகுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர்  இந்த மனுவூடாக கோரியுள்ளார்.

அத்துடன் பாதுகாப்பற்ற எரிவாயு சிலிண்டர்கள் சார் விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் நட்டஈட்டை செலுத்த, லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறும்  மனுதாரர்  கோரியுள்ளார்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் டி.எம்.எச். திஸாநாயக்க, இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சித்தீகா சேனாரத்ன ஆகியோரின் அலட்சியப் போக்கினால், சமயல் எரிவாயுவை பயன்படுத்திய பலருக்கு உடல் ரீதியிலான கயங்கள் மற்றும் சொத்து இழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இம் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று  (09) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.