Developed by - Tamilosai
அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு நேற்று வருகைத்தந்த பவர், விவசாயத்துக்கு உதவியளிக்கும் வகையில் 40 மில்லியன் அமரிக்க டொலர்களுக்கான நிதியுதவியை அறிவித்தார்.
அத்துடன் இலங்கைக்கு அமரிக்கா இந்த தருணத்தில் உதவி செய்யும் என்ற நிலையில், எதிர்காலத்தில் இலங்கையின் நெருக்கடி தொடர்பில் தமது கவலையையும் வெளிப்படுத்தினார்.
அதேநேரம் இந்தியாவுடன் இலங்கை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமந்த பவர் இன்று பல்வேறு மட்டத்தினருடனும் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.