Developed by - Tamilosai
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அதற்கமைய, ஜனவரி 3ஆம் திகதி முதல் ஜனவரி 30ஆம் திகதி வரை இவ்வாறு மூடப்படுவதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடினாலும் நாட்டுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதன் காரணமாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் எரிசக்தி அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்