Developed by - Tamilosai
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதன்படி எரிபொருள் சுத்திகரிப்பு கொதிகலனின் செயற்பாடுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. மசகு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சுத்திகரிப்பு ஆலையின் செயல்பாடு கடந்த ஜனவரி 3 ஆம் திகதி நிறுத்தப்பட்டது.
எனினும், இதுவரை 90,000 மெட்ரிக் டன் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மசகு எண்ணெய் கிடைக்கப்பெற்றதன் பின்னர், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி முதல் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.