Developed by - Tamilosai
சந்திரமுகி 2 படத்தில் வடிவேலுவின் கேரக்டர் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. இதனால் நகைச்சுவை காட்சிகள் வேற லெவலில் அமையும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சந்திரமுகி படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய பி. வாசு இயக்கி வருகிறார். ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு பாகுபலி படங்களுக்கு இசையமைத்த கீரவானி இசையமைத்து வருகிறார்.
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் வடிவேலு இடம்பெற்றிருக்கிறார். இதில் வடிவேலுவின் கேரக்டர் பெயர் முருகேசன் என தகவல்கள் வெளிவந்துள்ளன. முதல் பாகத்திலும் இதே கேரக்டரில்தான் வடிவேலு நடித்திருப்பார்.