Developed by - Tamilosai
சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றஞ்சுமத்தப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று வழக்குகளிலிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய காலப் பகுதியில், 153 சதொச நிறுவன ஊழியர்களை அரசியலில் ஈடுபடுத்தியன் ஊடாக, அரசாங்கத்திற்கு சுமார் 4 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இந்த நிலையில், குறித்த வழக்குகள் மீதான விசாரணை கொழும்பு பிரதம நீதவான் புத்திக்க சீ ராகல முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.