Developed by - Tamilosai
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசியினை 145 ரூபாவாக்கு சதொச ஊடக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.சிவப்பரிசியினை 145 ரூபாவுக்கும் மற்றும் ஒரு கிலோ சம்பா அரிசியை 175 ரூபாய்க்கும் கொள்வனது செய்ய முடியும் . ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சம் 05 கிலோ மாத்திரமே கொள்வனவு செய்யமுடியும் என வர்த்தக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.