Developed by - Tamilosai
சட்ட விரோதமான முறையில் இலங்கையிலிருந்து 7 பேர் தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(17) காலை படகின் மூலம் குறித்த 7பேரும் தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் கட்டை தீடை பகுதியை சென்றடைந்துள்ளனர்.
திருகோணமலை மற்றும் வவுனியா பகுதிகளை சேர்ந்த நபர்களே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்
மக்கள் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு சட்டவிரோத முறையில் தமிழகத்தில் புலம்பெயர்கின்றமை குறிப்பிடதக்கது.
குறித்த நபர்களிடம் விசாரணைகள் மேற்கொண்ட பின் அவர்கள் மறுவாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.