Developed by - Tamilosai
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகள் தொடர்பில் சட்ட திருத்தங்களை மாத்திரம் மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாது. இந்தியா எமது நட்பு நாடு என்ற ரீதியில் இரு தரப்பு இராஜதந்திர உறவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
வடக்கு கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகள் நீண்டகால பிரச்சினையாக காணப்படுகின்றது. நீதி அமைச்சு நேரடியாக தலையிட்டு இந்த விடயங்களை தீர்க்க முடியாது.