Developed by - Tamilosai
சட்டவிரோதமாக வௌிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று(15) அதிகாலை திருகோணமலை கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
50 ஆண்களும் 11 பெண்களும் 3 சிறார்களுமே இலங்கை கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படையினரால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.