தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் விகாரை

0 214

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் தொல்லியல் அகழ்வு இடம்பெற்றுவரும் இடத்தில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் விகாரையில் 40 இற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் மற்றும் அமைச்சர்கள் பிரித்ஓதல் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஹெப்பத்திகொல்லாவ, புல்மோட்டை அரிசிமலை,மணலாறு பகுதிகளிலிருந்து வருகை தந்த 40 இற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் தொல்லியல் அகழ்வு இடம்பெற்றுவரும் இடத்தில் அமைக்கப்பட்டு வரும் விகாரையில் பிரித்ஓதல் மேற்கொண்டு அமைச்சர்களோடு இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு வட்டுவாகலில் 617 ஏக்கர் மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமில் இரவு தங்கியிருந்து, அமைச்சர்கள் இருவரும் இன்று அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.