Developed by - Tamilosai
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் இன்று(25) நண்பகல் முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு சொந்தமான யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிராகவும், மின்சார சபையில் நிலவும் பிரச்சினைகளை முன்னிறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்க பெறும் வரையில் இந்தத் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.