தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே, ஞானசாரருக்கு அல்ல – ஐக்கிய தேசியக் கட்சி

0 76

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் பேசிய அவர், ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதி செயலணிக்கு இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் சமூகத்தையும் நீதித்துறையையும் பகைத்துக்கொண்டது மட்டுமல்லாமல் ஒரு தமிழரைக் கூட குறித்த செயலணியில் நியமிக்காமல் அந்த சமூகத்தை ஜனாதிபதி அவமதித்துள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் உண்மையான தலைவர் அனைத்து சமூகங்களையும் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைப்பார் என குறிப்பிட்ட ருவான் விஜேவர்த்தன, இந்த நெருக்கடி காலத்தில் அனைவரையும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இயற்கை அழகு, வளங்கள், வரலாறு, பாரம்பரியங்கள் மற்றும் கலாசார பன்முகத்தன்மை ஆகியவற்றை கொண்ட இலங்கையில் சமீப காலங்களில், தனிப்பட்ட பொருளாதார ஆதாயங்களுக்காக இயற்கை வளங்களை சுரண்டும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் காலநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாட்டில் ஜனாதிபதி பேசிக்கொண்டிருக்கும்போது, கடந்த இரண்டு வருடங்களாக நமது சுற்றுச்சூழலுக்கு மிக மோசமான அழிவு ஏற்பட்டுள்ளது என்பதை தான் வருத்தத்துடன் கூறுவதாகவும் ருவான் விஜேவர்த்தன குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.