தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சஜித் ஜனாதிபதி கனவில் மிதப்பவர்களுக்கு விடுத்துள்ள சவால்!

0 223

” ஜனாதிபதியாகும் கனவில் சிலர் தற்போதே அதற்கான ஆடைகளை தைத்து வைத்துக்கொண்டுள்ளனர். அத்தகைய ‘காட்போட்’ ஜனாதிபதிகளுக்கு நான் சவாலொன்றை விடுக்கின்றேன்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
43ஆம் படையணி எனும் அரசியல் இயக்கத்தின் மாநாட்டை சம்பிக்க ரணவக்க வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள பின்புலத்திலேயே சஜித்திடமிருந்து இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பில் சஜித் மேலும் கூறியவை வருமாறு,
” இந்த அரசு விவசாயத்தை முழுமையாக அழித்துள்ளது. எமது ஆட்சியில் விவசாயிகளுக்கு மாநிய விலையில் உரம் வழங்கப்படும். நாம் பலவீனமானதொரு அரசை உருவாக்கமாட்டோம். குழப்பங்களுக்கு வழிவகுக்கும் கூட்டணிகளுக்கும் இடமில்லை. நிச்சயம் அது மக்களுக்கான அரசாக அமையும்.
சிலர் ஜனாதிபதி கனவில் வாழ்கின்றனர். தற்போதே ஆடைகளையும் தைத்துக்கொண்டுள்ளனர். அத்தகைய காட்போட் ஜனாதிபதிகளுக்கு என்னைபோல மக்களுக்கு சேவை செய்து காட்டுமாறு சவால் விடுக்கின்றேன்.” – என்றார் சஜித்

Leave A Reply

Your email address will not be published.