தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சகல பிரஜைகளுக்குமான டிஜிற்றல் பணப்பை (Digital wallet) மென்பொருள் அறிமுகம்..

0 195

டிஜிற்றல் தேசிய அடையாள அட்டை´ அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் சகல பிரஜைகளுக்கும் டிஜிற்றல் பணப்பை ( digital wallet ) மென்பொருளை அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக இளைஞர் விவகார அமைச்சரும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கையடக்க தொலைபேசி மூலம் பணத்தை செலுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட LANKA QR குறியீட்டை கம்பஹாவில் மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவ்வாறு குறிப்பிட்டார்.
கடவுச்சீட்டு, பிறப்பு, விவாகச் சான்றிதழ்கள், பரீட்சைப் பெறுபேறுகள் உட்பட அத்தியாவசிய தனிப்பட்ட ஆவணங்களை தமது கைத்தொலைபேசியில் களஞ்சியப்படுத்துவதற்கான டிஜிற்றல் கட்டமைப்பு வசதி இதன் மூலம் கிடைக்கும்.
தேவையான சந்தர்ப்பங்களில் எந்தவொரு சிக்கலும் இன்றி உரிய ஆவணங்களை டிஜிற்றல் முறையின் கைத்தொலைபேசி ஊடாக வழங்கும் வாய்ப்பு சகல பிரஜைகளுக்கும் கிடைக்கும் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.