Developed by - Tamilosai
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மீண்டும் உயரும் என அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கால்நடை தீவனப் பற்றாக்குறையால் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் சந்தையில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 1200 ரூபாவுக்கும் மேல் உள்ளது.
அத்துடன் முட்டை ஒன்றின் 47.50 ரூபா என்ற போதிலும், சில இடங்களில் ஐம்பது ரூபாவுக்கும் அதற்கும் மேலதிகமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளது.