Developed by - Tamilosai
கடந்த மாதம் 30 ம் திகதி மட்டு போதனா வைத்தியசாலையில் பிரிவு ஒன்றில் கடமையாற்றிவரும் தாதியர்கள் விருந்து உபசாரம் ஒன்றிற்காக கோழிப் பிரியாணியை ஓடர் கொடுத்து வாங்கிச் சென்று அதனை உண்ணுவதற்காக திறந்த போது ஒருவரின் பொதியில் கோழி இறைச்சியுடன் இறந்த நிலையில் கரப்பான் பூச்சியும் இருந்துள்ளது.
இதனையடுத்து மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்டு முதலாளியை கைது செய்தனர்.
அத்துடன் நேற்று (08) கரப்பான் பூச்சியுடன் கோழிப்பிரியாணி உணவுப்பொதியை வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் எச்சரித்து 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.