Developed by - Tamilosai
யாழ். கோப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த வாள்வெட்டுக்குழு வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், வீட்டில் இருந்த முதியவர் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று மாலை கோப்பாய் பகுதியில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கோப்பாய் பூதர்மடத்தடியைச் சேர்ந்த கதிர்காமநாதன் குணரட்னசிங்கம் (வயது – 58) என்பவரே படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வீடொன்றினுள் கூரிய ஆயுதங்களுடன் புகுந்த கும்பல், வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், வீட்டின் மீதும் தாக்குதலை மேற்கொண்டு, வீட்டிலிருந்த முதியவர் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.