Developed by - Tamilosai
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்தவர் கோப்பாய் மத்தியைச் சேர்ந்த 63 வயதுடைய சின்னத்தம்பி குணராசா என கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் நாவற்குழி பகுதியை நோக்கி திரும்பிச் சென்றபோது துவிச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த முதியவர் மீது வாகனம் ஏறியதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு வாகனமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.