Developed by - Tamilosai
கோதுமை மாவின் விலை 159 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் இன்று நள்ளிரவு முதல் பாண் ஒன்றின் விலை 20-30 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு பனிஸின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என ஜயவர்தன தெரிவித்தார்.
அதன்படி, இன்று பிற்பகல் நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலின் மூலம் பாணின் நிர்ணயவிலை தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.