தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கோட்டா அரசாங்கம் மக்களை ஏமாற்றிவிட்டது: கொழும்பு பேராயர் குற்றச்சாட்டு

0 229

ஈஸ்டர்  தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாகத் தெரிவித்து கோட்டாபய அரசாங்கம் மக்களை ஏமாற்றிவிட்டது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம்சாட்டியுள்ளார்.

குறித்த தாக்குதல்களுக்கு பின்னணியில் மிகவும் சந்திவாய்ந்த ஒருவர் இருக்கின்றார் என்பதே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடையவர்களைத் தண்டிப்பதாக பொதுமக்களுக்கு ஜனாதிபதி, தனது தேர்தல் பிரசாரத்தின்போது உறுதியளித்தார் என்றும்  பேராயர் சுட்டிக்காட்டினார்.

மேலும் தேர்தல் வெற்றியின் பின்னரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி உறுதியளித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு சந்தேகத்திற்குரிய விடயங்கள் குறித்து விசாரணையை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கும், புலனாய்வுப் பிரிவினருக்கும் குறித்த ஆணைக்குழு அறிவுறுத்திய நிலையில் அதனை இதுவரை நிறைவேற்றவில்லை என்றும்  பேராயர் குற்றம்சாட்டினார்.

எனவே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக என்ன நடந்தது? என்ற உண்மையை அறியும் முயற்சியில் சர்வதேச சமூகம் எங்களுக்கு உதவ வேண்டும் என்றும்  ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.