Developed by - Tamilosai
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa)மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa.)உட்பட 18 சிறிலங்கா கடற்படை மற்றும் படை அதிகாரிகள் மீது சர்வதேச தடைகளை விதிக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுவின் தலைவரான எலியட் கோல்பேர்ன்(Elliott Colburn) இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தடைகள் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரச தலைவர் கோட்டாபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர்ந்த தடை விதிக்கப்பட்டுள்ள ஏனையோர் விபரம் பின்வருமாறு:
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka), தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva), சத்தியபிஞ்சர லியனகே (Satyapinjara Liyanage),தற்போதைய பாதுகாப்பு செயலர் ஜெனரல் கமல் குணரத்ன(Kamal Gunaratne),முன்னாள் யாழ்.மாவட்ட தளபதி மஹிந்த ஹத்துருசிங்க (Mahinda hathurusinghe),முன்னாள் படைத்தளபதி மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி(Nanda Mallawarachchi),முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய(Jagath Jayasuriya), பஞ்சரசன்ன சில்வா(Panjarasanna Silva) நந்தன உடவத்த(Nandana Udawatte), சாகி கல்லகே(Chagi Gallage), ஜி. டி. ரவிபிஞ்சரா(G. D. Ravipinjara), முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட(Wasantha Karannagoda), அட்மிரல் திசார ரணசிங்க (Thisara Ranasinghe), சோமதிலக்க திஸாநாயக்க (Somathilake Dissanayake) மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் கட்டளைத் தளபதி ஆகியோர் அடங்குகின்றனர்.
அத்துடன் விடுதலை புலிகளின் ஒன்பது புலம்பெயர் அமைப்புகளும் இந்த கோரிக்கைக்கு ஆதரவளித்துள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.