தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கோட்டாபயவை கைது செய்யக் கோரி ஸ்கொட்லாந்தில் அணி திரண்ட தமிழர்கள்

0 106

இங்கிலாந்தின் ஸ்கொட்லாந்து பகுதியிலுள்ள க்ளாஸ்கோ நகரில் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் சர்வதேச பருவ நிலைமாற்ற மாநாடு நடந்து வருகிறது.


இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சென்றுள்ளார். இந்நிலையில் அவருடைய வருகைக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.


2009 ஆம் ஆண்டு நடந்த தமிழினப் படுகொலைக்குக் காரணமாகவிருந்த கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 


கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக இங்கிலாந்து முழுவதிலும் இருந்து தமிழர்கள் க்ளாஸ்கோ நகருக்குப் புறப்பட்டு சென்றுள்ளனர்.


 அதுமட்டுமல்லாமல் மற்ற வெளிநாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர்களும் அங்கு வந்து குவிந்துள்ளனர்.


கோட்டாபய ராஜபக்ஷ, கொலைக் குற்றவாளி என விமர்சிக்கும்  பதாகைகள், லேசர் ஒளி காட்சிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.


 இலங்கைத் தமிழர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளதால் க்ளாஸ்கோ நகரில் பதற்றம் நிலவுகிறது. அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. 


கோட்டாபய ராஜபக்ஷ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் நடந்தன.


 கோட்டாபய ராஜபக்ஷ செய்த படுகொலைகள் தொடர்பாக ஸ்காட்லாந்து பத்திரிகைகளிலும் பெரிய அளவில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.