தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 15 பேர் பலி!

0 98

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்தனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில்  இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகி  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,841 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 03 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 12 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 01 ஆணும் 02 பெண்களும் அடங்குவதாகவும் 60 வயதுக்கு மேற்பட்மோரில் 07 ஆண்களும் 05 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.