Developed by - Tamilosai
மட்டக்களப்பு முதல் கொழும்பு வரையிலான அதிவேக குளிரூட்டப்பட்ட ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவை – கொழும்பு – கோட்டைக்கிடையில் ஆரம்பிக்கப்பட்ட ‘புலதிசி’ அதிவேக குளிரூட்டப்பட்ட ரயில் சேவை, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தீர்மானத்துக்கமைவாக எதிர்வரும் 28 முதல் மட்டக்களப்பு – கொழும்பு ‘புலதிசி’ கடுகதி சேவையாக விஸ்தரிக்கப்படவுள்ளது. இச் சேவை மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கு புறப்பட்டு காலை 08.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். மீண்டும் பிற்பகல் 3.05 கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் ரயில் இரவு 9.52 க்கு மட்டக்களப்பு ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளது.