Developed by - Tamilosai
இந்தியாவில் இருந்து 40,000 மெட்ரிக் டொன் டீசலுடனான கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ் இந்த டீசல் தொகை இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
அதன்படி, கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் பணியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன், எரிபொருள் விநியோகம் இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.