தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொழும்பு கோட்டையிலிருந்து கட்டுநாயக்க வரை செல்லும் பயணிகளுக்கு தற்போது 40 நிமிடங்களுக்குள் சென்றடைவதற்கான வாய்ப்பு

0 364

கட்டுநாயக்கவில் இருந்து நீர்கொழும்பு நகரத்திற்கு 40 நிமிடங்களில் பயணிப்பதற்கான ரெயில் சேவைக்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைவாக ,கட்டுநாயக்க – நீர்கொழும்பு ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையில் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இதற்கான ரெயிலை உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது.

இதன் மூலம் கொழும்பு கோட்டையிலிருந்து கட்டுநாயக்க வரை செல்லும் பயணிகளுக்கு தற்போது  40 நிமிடங்களுக்குள் சென்றடைவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இதன் நிர்மாணப் பணிகளுக்கென 4 ஆயிரத்து 446 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை களுத்துறை – கொழும்பு, வெயங்கொட –கொழும்பு ,அவிசாவளை – கொழும்பு ஆகிய நகரங்களுக்கிடையிலும் இவ்வாறான ரயில் சேவைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இந்த நிகழ்வின் போது தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.