Developed by - Tamilosai
கொழும்பு – கண்டி வீதியில் 98ஆவது கிலோ மீற்றர் கீழ் கடுகன்னாவ வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினரும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் களப்பரிசோதனை செய்து வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி வீதியின் 98ஆவது கிலோ மீற்றர் மைல்கட்டைப் பகுதியில் கீழ் கடுகன்னாவ பகுதி மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே, போக்குவரத்துத் தடையை தடுப்பதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்த முடியும். அதற்குத் தேவையான வழிகாட்டல்களை பொலிஸாரும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் வழங்கி வருகின்றனர்.