தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொழும்பில் வெடிப்பு சம்பவம் – பொலிஸார் விசாரணை

0 264

கொழும்பு, கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள கட்டடமொன்றில் இன்று(சனிக்கிழமை) காலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சர்வதேச உணவு உறுபத்தி நிறுவனத்துக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பம் இடம்பெற்றுள்ளது.

ஹோட்டலில் இருந்து வெளியான வாயு கசிவினால் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதன்போது ஏற்பட்டுள்ள தீயை கட்டப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் தீயபை்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், உயிரிழப்புகளோ, மரணங்களோ இதுவரையில் பதிவாக வில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்துக்கான காரணத்தை முறையாக உறுதிப்படுத்தவதற்காக கொழும்பு இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.