தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொழும்பில் மாயமான இளைஞர்

0 67

கடந்த 8ஆம் திகதி மாவத்தகம – மெல்வத்த வேஉடப் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய முஹமட் நஸ்லான் என்ற இளைஞர் கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்துக் காணாமல்போயுள்ளார்.

கொழும்பில் பிட்டிங் தொழில் புரிவதற்காக வந்திருந்த அவர், தம் நண்பர் சகிதம் ஊருக்குச் செல்வதற்காகக் கொழும்பு – கோட்டை புகையிரத நிலையம் வரை வந்துள்ளார்.

இவருடைய நண்பர் இருவருக்குமான புகையிரத பயணச் சீட்டைப் பெற்றுக் கொண்டு வந்து பார்த்த போது அவரை காணவில்லை என கோட்டை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் தொடர்பில் தகவல்கள் கிடைக்குமாயின் அவருடைய தந்தை எம்.டி.சாலிஹீன் 0758005637 அல்லது அவருடைய உறவினர் ஏ.எம்.முஜாஹிரின் 0772820820 ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறு குடும்பத்தினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.