Developed by - Tamilosai
இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பங்களாதேஷின் 51வது சுதந்திர மற்றும் தேசிய தின நிகழ்வுகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (26) கொழும்பு கோலஃ;பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் மொஹமட் ஆரிபுல் இஸ்லாம் அவர்களின் அழைப்பின் பேரில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை நிறுவி 50 ஆண்டுகள் பூர்த்தியாவதோடு. அது இந்நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் முகமாக அமையப்பெற்றிருந்தது