Developed by - Tamilosai
கடந்த 26 ஆம் திகதி அதிகாலை வனவாசல பொசொன்வத்த பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல விடயங்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதுக்கடையைச் சேர்ந்த மொஹமட் இர்ஷாட் என்ற 40 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
பணப் பிரச்சினை காரணமாக நண்பர்கள் சிலர் அவரைக் கடத்திச் சென்று கொழும்பு கிராண்பாஸ் பிரதேசத்தில் வைத்து தாக்கியதில் அவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவரைக் கொலை செய்து வனவாசல பொசொன்வத்த பிரதேசத்திற்கு மோட்டார் வாகனம் ஒன்றில் கொண்டு சென்ற சந்தேகநபர்கள் சடலத்தை அங்கு வீசிவிட்டு சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பேலியகொடை குற்றப் பிரிவு மற்றும் களனி குற்றப் பிரிவு ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குறித்த கொலையுடன் தொடர்புடைய சிசிரிவி காட்சிகள் சிலவற்றை பொலிஸார் ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ளனர்.