Developed by - Tamilosai
மியன்மாரின் முன்னாள் அரச தலைவர் ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்து புதிய உத்தரவை மியன்மார் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியன்மாரில் நடைபெற்று வந்த இராணுவ சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்து மக்களுக்காக போராடியவர் ஆங் சாங் சூகி.
‘பர்மாவின் காந்தி’ என்று உலக நாடுகளால் அழைக்கப்படுபவர். இவருக்கு 1991ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. மேலும், இவருக்கு 1992ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு விருதினை வழங்கி இந்தியாவின் சார்பில் கௌரவிக்கப்பட்டது.
மாபெரும் மக்கள் தலைவராக கருதப்படும் ஆங் சாங் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மியன்மார் நாட்டு இராணுவ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆங் சாங் சூகி, கருத்து வேறுபாடுகளை தூண்டும் விதமாக நடந்து கொண்டார் என்றும் கொரோனா விதிகளை மீறி உள்ளார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவர் மீது மொத்தம் 11 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை எல்லாம் அவர் மறுத்துள்ளார் என்றும் சேர்வதேச ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.