தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொரோனா மரணங்கள் மீண்டும் அதிகரிப்பு!

0 108

நாட்டில் கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்தனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார் .

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (04) உயிரிழந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 821 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 2 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 13 பேரும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 05 ஆண்களும் 08 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் மேலும் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,43,867 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 339 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,14,573 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.