Developed by - Tamilosai
இலங்கை தற்போது நான்காவது கொரோனா அலையை அண்மித்துக் கொண்டிருக்கிறது.
இதே நிலைமை தொடர்ந்து தீவிரமடைந்து மீண்டும் நாட்டை முடக்கிய கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் ஸ்தம்பிதமடையச் செய்வதா? என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
எனவே மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினால் அபாய நிலைமையிலிருந்து ஓரளவிற்கு பாதுகாப்பு பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
இலங்கை தற்போது நான்காவது அலையை அண்மித்துக் கொண்டிருக்கிறது. உலகலாவிய ரீதியில் பல நாடுகளில் கொவிட் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மக்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதில் காணப்படும் பலவீனம், போக்குவரத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் காணப்படும் பலவீனம், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாமை உள்ளிட்ட காரணிகளால் தற்போது தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதேநிலைமை தொடர்ந்து தீவிரமடைந்து மீண்டும் நாட்டை முடக்கிய கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் ஸ்தம்பிதமடையச் செய்வதா? என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.