தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொரோனா தொற்று தொடர்பில் WHO வெளியிட்ட தகவல்!

2 1,191

 உலகளவில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் உயிரிழப்பு குறைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.வேர்ல்டோ மீற்றர் கணக்கின்படி, உலக அளவில் கொரோனாவில் 24 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இதில் 48.91 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 21.17 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உலக அளவில் மக்களுக்குச் செலுத்தப்படுவதன் காரணமாக, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் வாராந்திர ஆய்வு குறித்து நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், ´´கொரோனாவால் பாதிக்கப்பட்டு உலக அளவில் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. 
கடந்த வாரத்தில் உலகளவில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 


கடந்த ஓராண்டில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட மிகக் குறைவான உயிரிழப்பு இதுவாகும். உலக நாடுகள் அளித்த கணக்கின்படி 50 ஆயிரம், ஆனால், உண்மையில் உயிரிழப்பு அதிகமாகக் கூட இருக்கலாம்.

ஐரோப்பாவைத் தவிர்த்து உலகின் பல்வேறு நாடுகளிலும், மண்டலங்களிலும் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 


அதேசமயம், பல நாடுகள் புதிதாக கொரோனா அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன.
 குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய மக்கள் இருக்கும் நாடுகளில் கரோனாவால் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது´´ எனத் தெரிவித்தார்.

2 Comments
 1. https://instantjobinterviewtools.com
  I was curious if you ever considered changing the layout of your website?
  Its very well written; I love what youve got to say.
  But maybe you could a little more in the way of content so people could connect with it better.
  Youve got an awful lot of text for only having 1 or 2 images.
  Maybe you could space it out better?

 2. auto approve list says

  I’ve been exploring for a bit for any high-quality articles or blog
  posts on this kind of house . Exploring in Yahoo I finally stumbled upon this web site.
  Studying this information So i’m glad to exhibit that I’ve an incredibly good uncanny
  feeling I discovered exactly what I needed.
  I such a lot definitely will make certain to
  don?t overlook this site and give it a glance on a relentless
  basis.

Leave A Reply

Your email address will not be published.