தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 கோடியை கடந்தது

0 227

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 கோடியை கடந்துள்ளதாக அமெரிக்காவிலுள்ள  ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் இதுவரை 5,761,208 பேர் மரணமடைந்துள்ளார்கள்.

அமெரிக்கா 77,025,027 தொற்றாளர்கள் மற்றும் 908,262 மரணங்களுடன் முதலிடத்திலுள்ளது.

இவை இரண்டும் உலகெங்கிலும் உள்ள மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். இது உலகளாவிய ரீதியில் தொற்றாளர்களில் 19 சதவீதத்திற்கும் அதிகமாகவும் மரணங்கள் 15 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உள்ளது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா 42,339,611 தொற்றாளர்களுடன் உலகின் இரண்டாவது  இடத்தில் உள்ளது.

அதைத் தொடர்ந்து 26,776,692 தொற்றாளர்களுடன் பிரேசில் மூன்றாவது இடத்தல் உள்ளதோடு, 634,057 கொரோனா உயிரிழப்புகளுடன்  உலகின் இரண்டாவது இடத்திலுள்ளது.

ஒரு கோடியே 20 இலட்சத்துக்கும் அதிகமான  தொற்றாளர்களை  கொண்ட நாடுகளாக பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா மற்றும் துருக்கி ஆகியவை உள்ளது.

அதே நேரத்தில் 200,000 க்கும் அதிகமான மரணங்களை கொண்ட நாடுகளாக இந்தியா, ரஷ்யா, மெக்ஸிகோ மற்றும் பெரு ஆகியவை உள்ளது என ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  2021 ஆம் ஜனவரி  26 ஆம் திகதி  அன்று 10 கோடியை எட்டியது. 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி 20 கோடியாக உயர்ந்தது. 2022  ஜனவரி 6 ஆம் திகதி 20 கோடியைக் கடந்தது.

Leave A Reply

Your email address will not be published.