Developed by - Tamilosai
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 15 பேர் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 72 ஆக அதிகரித்துள்ளது.