Developed by - Tamilosai
கொவிட் பெருந்தொற்றில் இருந்து மனித குலம் நிச்சயம் மீண்டுவரும். இதனை வெல்வதற்கு கூட்டு முயற்சிகள் தான் ஒரே வழி என்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங் .
உலகப் பொருளாதார மன்றத்தின் உச்சிமாநாட்டில் காணொளிக் காட்சி மூலம் நிகழ்த்திய சிறப்புரையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் சிறப்புரை வழங்கிய அவர்,
“கொரோனா தொற்றால் ஒரு நூற்றாண்டில் பார்த்திராத பெரிய மாற்றங்களுக்கு உலகம் தள்ளப்பட்டிருக்கிறது.
தொற்றுநோயை முறியடிப்பது மற்றும் கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது உலகெங்கிலும் உள்ள மக்களின் பொதுவான கவலையாக உள்ளது.
சர்வதேச அளவில் நியாயமான தடுப்பூசி விநியோகம் மற்றும் தடுப்பூசி இயக்கத்தை வேகப்படுத்துவது பெருந்தொற்றில் இருந்து நாம் விரைவாக விடுபட வழிவகுக்கும்” என்றார்