தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொரோனாவுக்கு மேலும் 18 பேர் பலி!

0 87

 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (23) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 35 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து பூரணமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 3,090 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.