தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொரோனாவால் மேலும் 19 பேர் மரணம்

0 157

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 593 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 34 ஆயிரத்து 975 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு கொரோனா தொற்றிலிருந்து இன்று மேலும் 350 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை கொரோனா தொற்றிலிருந்து பூரணமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 3090 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.