தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொட்டும் மழையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழில் போராட்டம்

0 62

யாழ்ப்பாணத்திலுள்ள ஐ.நா. அலுவலகம் முன்பாக கொட்டும் மழையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தின் போது தமது பிள்ளைகளை உலக நாடுகள் மீட்டுத்தர வேண்டும், இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இந்த அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை, சர்வதேசமே எமக்குத் தீர்வு கொடு போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தின்போது புலனாய்வாளர்கள் அவ்விடத்தில் குவிந்திருந்ததை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.