Developed by - Tamilosai
இன்று காலை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதி, கொட்டகலை பிரதேசத்தில் வீதி ஓரத்தில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் காயங்களுடன் காணப்படுவதாகவும், இவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது வீதி விபத்தில் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் ஏதேனும் தெரிய வந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.