தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொட்டகலையில் கேஸ் அடுப்பு வெடிப்பு சம்பவம்

0 67

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் உள்ள வீடு ஒன்றில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் 12.12.2021 அன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேநீர் தயாரிப்பதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். 5 நிமிடங்களுக்கு பிறகு கேஸ் அடுப்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வீட்டாளர்கள் தெரிவித்தனர். வெடிப்பை அடுத்து கேஸ் அடுப்பு முழுமையாக சேதமமைந்துள்ளதுடன், அதன்பின்னர் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தாக வீட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.