தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை

0 233

 வடக்குக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட போது படகு விபத்துக்குள்ளாகிய நிலையில் கைதான இந்திய மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த வாரம் யாழ்ப்பாணக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட போது அவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளாகியது.

இச்சம்பவத்தில் கடலில் வீழ்ந்த மீனவர்களில் இருவர் கடற்படையினரால் மீட்கப்பட்ட போதிலும் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

மீட்கப்பட்ட மீனவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்றிருந்த நிலையில் அவர்களை விடுதலை செய்யுமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சில நாட்களில் குறித்த மீனவர்கள் இருவரும் இந்தியா திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.