தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“கைதிகளும் மனிதர்களே” – ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள கோரிக்கை

0 88

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாக சிறைகளில் வாடுகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களில், சுமார் 12,000 பேர் யுத்த முடிவின் பின்னர், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடத்தினை தெரிவித்துள்ளார்.

சிற்சில காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள், இன்னும் குற்றப்பத்திரிகைகள் கூட தாக்கல் செய்யப்படாமல் தசாப்தகாலமாக சிறையில் வாடுகின்றனர். அவர்களின் விடுதலையிலும் கவனம் எடுக்குமாறு நீதி அமைச்சரிடம் வேண்டுகின்றேன்.

 “எம்மைப்பற்றி எவருமே அக்கறைகொள்வதாக தெரியவில்லை” என்ற வேதனையுடனேயே அவர்கள் வாழ்கின்றனர்.

அதுமாத்திரமின்றி, சிறைச்சாலையில் வசதிகளும் மிகவும் மோசமாக இருக்கின்றது. அவர்களின் விடயத்திலும் “கைதிகளும் மனிதர்களே” என்ற எண்ணத்துடன் கரிசனை செலுத்துங்கள் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.