Developed by - Tamilosai
இலங்கைக்கு 900 கடல் மைல்களுக்கு அப்பால் தென் திசையில் 250 கிலோ கிராம் ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்ட படகு மற்றும் 6 சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்து வர மேலும் சில நாட்கள் எடுக்கும் என கடற்படை தெரிவித்துள்ளது.
ஆழமான கடலில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாகவே குறித்த செயற்பாட்டிற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர், போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்துடன் இணைந்து முன்னெடுத்த தேடுதலின் போது குறித்த ஹெரோயினை கடத்திச் சென்ற வெளிநாட்டு படகு அண்மையில் கைப்பற்றப்பட்டது.
அந்த படகில் சுமார் 225 பொதிகளில் இருந்து 250 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறுவர் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.