Developed by - Tamilosai
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேவா நகர் பிரதேசத்தில் பாதாள உலகக் கோஷ்டியுடன் தொடர்புடைய நபர் ஒருவரை தாம் நேற்று இரவு கைது செய்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் மூன்றடி நீளமான வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் சென்ற மாதம் குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனத் தெரிவித்த உப்புவெளி பொலிஸார் தேவா நகர் பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர் எனவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.