தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கேரள கஞ்சா பொதிகளுடன் 18 வயது இளைஞன் கைது

0 86

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுப்பாடு கிராம பகுதியில் ஒரு தொகுதி கேரளக் கஞ்சா பொதிகளுடன் 18 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், தாழ்வுப்பாடு கிராம பகுதியில் 10 கிலோ 370 கிராம் நிறை கொண்ட கஞ்சாப் பொதிகளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த இளைஞன் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விதானகே, தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கேரள கஞ்சாவை கைப்பற்றியுளதோடு, அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 18 வயதுடைய மன்னார் கீரி பகுதியை சேர்ந்த இளைஞரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணையின் பின் பொலிஸார் மன்னார் நீதிமன்றில் கையளிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.