தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கேரளக் கஞ்சா பொதியுடன் பாடசாலை மாணவன் கைது

0 125

 மன்னார் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மூர்வீதி பகுதியில் ஒரு தொகுதி கேரளக் கஞ்சா பொதிகளை தன் வசம் வைத்திருந்த 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர்  மன்னார் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் மூர்வீதியைச் சேர்ந்த குறித்த 17 வயது பாடசாலை மாணவனிடம் இருந்து 4 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜீவ பண்டார மற்றும் மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு தற்காலிக பொறுப்பதிகாரி சி.ஐ.மணலகுமார,உப பொலிஸ் பரிசோதகர் ராமநாயக்க உப பொலிஸ் பரிசோதகர் வணசிங்க தலைமையிலான குழுவினர் மேற்பட்ட கஞ்சா பொதியை கைப்பற்றியதோடு, குறித்த மாணவனையும் கைது செய்துள்ளனர்.

மேற்படி கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இராணுவப் புலனாய்வு பிரிவினரின் இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கடந்த திங்கட்கிழமை மதியம் மன்னார் தள்ளாடி சந்தியில் வைத்து ஒரு கிலோ 665 கிராம், கேரளக் கஞ்சா போதைப்பொருளை தம்வசம், வைத்திருந்த மற்றும் கொண்டு சென்ற குற்றத்தில் புத்தளத்தில் வசிக்கும் 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.